இந்தியத் தூதுவருடன் நாமல் ராஜபக்ச சந்திப்பு
இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவைக் கைது செய்ய அம்பாந்தோட்டை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பான எந்த அறிவித்தல்களும் அவருக்கு வழங்கப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
‘தி ஹிந்து’ நாளிதழ் குழுத்தினால் நடத்தப்படும், இரண்டு நாள் கருத்தரங்கில் பங்கேற்க, பெங்களூரு சென்றிருந்த சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்தியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
இரண்டு நாட்கள் பயணம் ஒன்றை மேற்கொண்டு, சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்குப் பயணமாகியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று நீண்ட நேரம் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
இன்று காலை தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவைச் சந்தித்த ஐதேகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பாக கலந்துரையாடியதுடன், ஜனநாயகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்து வந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இப்போது அவர்களை விடுவிக்கவுள்ளது, முற்றிலும் அரசியல் சந்தர்ப்பவாதம் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள் சமரவீர தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் தனது மகன் நாமல் ராஜபக்ச போட்டியிடுவதற்கு வயது போதவில்லை என்று, இந்திய ஊடகங்களுக்கு தாம் கூறியதாக சிறிலங்கா ஊடங்கள் பொய்யான செய்தியை வெளியிட்டதாக கூறியிருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.