மேலும்

பெரும்பான்மை இல்லாமல் அரசாங்கம் எதற்கு? – மகிந்த தரப்பைக் கேட்கும் குமார வெல்கம

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமல், ஆளும்கட்சியாக தொடர்வதாக கூறுவதும், அரசாங்க ஆசனங்களை அடாவடித்தனமாக கைப்பற்றியிருப்பதும் தவறானது என்று மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த குழப்பங்களை அடுத்து கருத்து வெளியிட்டுள்ள அவர்.

“நம்பிக்கையில்லா பிரேரணையில் எமது வாக்குகளை அளிக்க முடியும்.  ஆனால், எமது கட்சியில் உள்ள  சில சக்திகள்  அதனை அனுமதிக்கவில்லை.

மகிந்த ராஜபக்ச ஒரு மதிநுட்பமான அரசியல்வாதி என்பதை நான் அறிவேன். இதனை அவர் அனுமதிக்கமாட்டார்.

அவர்களுக்குப் பெரும்பான்மை பலம் இல்லையென்றால் எதற்காக ஒரு அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் நடந்த குழப்பங்களை, வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஒளிப்பதிவு செய்து கொண்டார்கள்.

அவர்கள் அதனை உலகம் முழுவதும் அனுப்புவார்கள். இது எமது நாடு பற்றி உலகம் குறைத்து மதிப்பிடவே உதவும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *