மேலும்

வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர்

தற்போதைய பொருளாதார மந்தநிலை சிறிலங்காவுக்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகள் இந்தச் சவாலை எதிர்கொள்ளுகின்றன என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மகரவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,

“அரசாங்கத்தினால் முடியாததை தம்மால் செய்ய முடியும் என்று, குறிப்பிட்ட சிலர் அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.

நாட்டுக்கு நன்மையளிக்கும் வகையில் பொறுப்பான முறையில் செயற்படுமாறு அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். தமது அரசியல் நலனுக்கான மலினத்தனமான பரப்புரைகளை செய்யக் கூடாது.

உலக வல்லரசுகளுக்கிடையிலான முரண்பாடுகளால், சிறிலங்கா போன்ற சிறிய நாடுகள், பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.

எனினும், பொருத்தமான பொருளதார முகாமைத்துவம் மூலம், இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கு, சிறிலங்காவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அரசியல்வாதிகளும், அரச பணி்யாளர்களும், ஊழல், மோசடி, தவறான நடத்தைகளின்றி  தமது கடமைகளைச் செய்யும் போது, நாட்டின் பொருளாதார இலக்குகளை அடைவது கடினமானதல்ல.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *