மேலும்

முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் காலமானார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93 ஆவது வயதில்- புதுடெல்லியில்  இன்று மாலை காலமானார்.

உடல்நலக் குறைவினால் கடந்த ஜூலை 11ஆம் நாள் புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாஜ்பாய்க்கு தொடர்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நேற்று அவரது உடல் நிலை மோசமடைந்த நிலையில் இன்று மாலை 5.05 மணியளவில் வாஜ்பாய் காலமானார்.

மூன்று தடவைகள் இந்தியாவின் பிரதமராகப் பதவி வகித்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். திருமணம் செய்து கொள்ளாமல் எளிமையாக அரசியல் நடத்தி, மக்களின் மதிப்பைப் பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாஜ்பாயின் உடலுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *