மேலும்

குடும்ப நல அதிகாரிகளின் சீருடை விடயத்தில் முட்டி மோதும் மத்திய – மாகாண அரசுகள்

குடும்ப நல அதிகாரிகளின் சீருடை விடயத்தில், சிறிலங்காவின் மத்திய சுகாதார அமைச்சுக்கும், வட மாகாண சுகாதார அமைச்சுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

குடும்ப நல அதிகாரிகளுக்காக சிறிலங்காவின் சுகாதார அமைச்சு அண்மையில் புதிய சீருடையை அறிமுகம் செய்திருந்தது.

இந்தப் புதிய சீருடை தொடர்பாக அனைத்து குடும்ப நல அதிகாரிகளுக்கும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மூலம்  தெரியப்படுத்தப்பட்டது.

எனினும், வட மாகாணத்தில் உள்ள குடும்ப நல அதிகாரிகள் புதிய சீருடையை அணியக் கூடாது என்று, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன,

” சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் சுற்றறிக்கைகள்,  ஒட்டுமொத்த நாட்டுக்குமே பொருத்தமுடையது. மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,  அதனை அணியக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தாலும், வடக்கு மாகாணத்தில் உள்ள குடும்ப நல அதிகாரிகளும் புதிய சீருடையையே அணிய வேண்டும்” என்று கண்டிப்பாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் குடும்ப நல அதிகாரிகள், சுகாதார அமைச்சின் சட்டதிட்டங்களையும், விதிமுறைகளையும் ஒழுங்காக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *