மேலும்

நாள்: 13th May 2018

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற ஆசனத்தை நிராகரித்தார் விக்னேஸ்வரன்?

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்குவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்த போதும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதனை நிராகரித்து விட்டார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானிய அதிபரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

ஈரானுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஈரானிய அதிபர் ஹசன் ரொஹானியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

காணாமல் போனோருக்கான பணியகத்தின் மீது அவநம்பிக்கை வெளியிட்ட உறவினர்கள்

காணாமல் போனோருக்கான பணியகம், மன்னாரில் நேற்று, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் முதலாவது கலந்துரையாடலை நடத்தியது.

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – சிறிலங்கா அதிபர் திட்டவட்டம்

போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் உள்நாட்டு செயல்முறைகளில், வெளிநாட்டு நீதிபதிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இன்று கொழும்பு வருகிறார் இந்திய இராணுவத் தளபதி

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஒரு வார காலப் பயணமாக இன்று கொழும்பு வரவுள்ளார். வெளிநாட்டுச் செய்தியாளர்களுடன் நடந்திய கலந்துரையாடலின் போது, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கோத்தாவே பொருத்தமான வேட்பாளர் – ஜோன் செனிவிரத்ன

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவே பொருத்தமானவர் என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்களை சந்திக்க முடியவில்லை – சிறிலங்கா அதிகாரிகள்

மலேசியாவில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றில் கைது செய்யப்பட்ட சிறிலங்காவைச் சேர்ந்த 131 அகதிகளையும் சிறிலங்கா அதிகாரிகளால் இதுவரை சந்திக்க முடியவில்லை. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈரானுக்குச் சென்றார் சிறிலங்கா அதிபர்

எண்ணெய் உள்ளிட்ட வணிக உறவுகளை  முன்னேற்றுவதற்கும்,  முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், இரண்டு நாட்கள் பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று ஈரானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.