மேலும்

நாள்: 2nd May 2018

சிறிலங்கா விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் நிலைப்பாட்டை சாடுகிறார் நவிபிள்ளை

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் நிலைப்பாட்டை, அந்த நாட்டின் முன்னாள் நீதிபதியும், முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருமான நவநீதம்பிள்ளை அம்மையார் கடுமையாகச் சாடியுள்ளார்.

ஒரு இலட்சம் சீனர்களை சிறிலங்காவுக்கு இழுக்க புரிந்துணர்வு உடன்பாடு

அடுத்த 12 மாதங்களில் ஒரு இலட்சம் சீன சுற்றுலாப் பயணிகளை சிறிலங்காவுக்கு ஈர்க்கும் வகையில், சீன நிறுவனம் ஒன்றுடன் சிறிலங்கா அரசாங்கம் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

ஐதேகவில் மீண்டும் குழப்பம் – பின்வரிசை உறுப்பினர்கள் போர்க்கொடி

ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெறும் கூட்டங்களைப் புறக்கணிக்கப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

‘புனுகுப் பூனை’க்குப் பொருத்தமான பதவி – பொன்சேகாவைக் கிண்டலடிக்கும் நாமல்

அமைச்சரவை மாற்றத்தின் போது, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு மாத்திரமே விஞ்ஞான முறையின் அடிப்படையில் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆறுமுகன் தொண்டமானுக்கும் அமைச்சர் பதவி?

இதொகா தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கும் சிறிலங்கா அமைச்சரவையில் இடமளிக்கப்படவுள்ளது. அமைச்சராகப் பதவியேற்குமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் மே நாள் பேரணிகள்

உலகத் தொழிலாளர் நாளை முன்னிட்டு, நேற்று வடக்கு கிழக்கில் பல்வேறு மே நாள் பேரணிகள் அரசியல் கட்சிகளின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றன.