சிறிலங்கா படைகளுக்கு வழங்கிய உதவிகள் – முக்கிய ஆவணங்களை அழித்தது பிரித்தானியா
சிறிலங்காவின் தமிழ் அமைப்புகளின் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த 1970களின் இறுதிக் காலகட்டத்தில், பிரித்தானியாவின் புலனாய்வு அமைப்புகள் சிறிலங்கா படையினருக்கு அளித்த உதவிகள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய ஆவணங்களை பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் அழித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.