மேலும்

நாள்: 25th May 2018

சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் அலய்னா பி ரெப்ளிட்ஸ்

வெளிவிவகாரச் சேவையின் மூத்த உறுப்பினரான அலய்னா பி ரெப்ளிட்ஸ், சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்படுவதற்கு, பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த நியமனத்தை அறிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றில் எதிரொலித்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம்

லண்டனில் ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்திய, சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம் குறித்து, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

20 ஆவது திருத்தச்சட்ட பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

சிறிலங்காவின் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கான முன்மொழிவுகள் அடங்கிய பிரேரணையை ஜேவிபி இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

நினைவேந்தல் நிகழ்வுக்கு தலைமை தாங்கிய முன்னாள் போராளி விசாரணைக்கு அழைப்பு

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய முன்னாள் போராளியை விசாரணைக்கு வருமாறு, சிறிலங்காவில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது.

புதிய அரசியலமைப்பை வரைய நிபுணர் குழுவுக்கு ஒரு மாத காலஅவகாசம்

புதிய அரசியலமைப்புக்கான வரைவை ஒரு மாத காலத்துக்குள் தயாரித்து தருமாறு, நிபுணர் குழுவிடம் வழிநடத்தல் குழு கேட்டுள்ளது.

சிறிலங்காவில் 6000 சீனப் பணியாளர்கள்

சிறிலங்காவில் 6000 இற்கும் அதிகமான சீனர்கள் பல்வேறு திட்டங்களில் பணியாற்றி வருவதாக, கொழும்பில் உள்ள சீனத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரர் குற்றவாளியாக அறிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி, சந்தியா எக்னெலிகொடவை நீதிமன்றத்துக்குள் வைத்து அச்சுறுத்தினார் என்று குற்றம்சாட்டப்பட்ட, பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர், குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அடுத்தவாரம் வடக்கிற்கு கிளம்புகிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்தவாரம் வடக்கில், முன்னெடுக்கப்படும் திட்டங்களை மேற்பார்வை செய்யவுள்ளார்.

சிறிலங்கா துடுப்பாட்ட அணி வீரரின் தந்தை நேற்றிரவு சுட்டுக்கொலை

சிறிலங்காவின் தேசிய துடுப்பாட்ட அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும், தெகிவளை – கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான ரஞ்சன் டி சில்வா அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.