மேலும்

நாள்: 28th May 2018

தமிழர் நிலங்களை அபகரிக்க வட்டமடிக்கும் ‘கழுகுகள்’ – முதலமைச்சர் சூசகம்

தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களையும், வளம்மிக்க நிலப்பரப்புகளையும் அபகரிப்பதற்கு, கழுகுகள் எம்மைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்  வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

இராணுவத் தளபதிகளை இலக்கு வைத்ததை மறந்து விட்டார் மகிந்த – சரத் பொன்சேகா

தனது ஆட்சிக்காலத்தில் இராணுவத் தளபதிகளை தாம் இலக்கு வைத்ததை, மகிந்த ராஜபக்ச மறந்து விட்டார் என்று, சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பெண் மருந்தாளரால் தாக்கப்பட்டார் மகாசோன் பலகாய தலைவர்

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மகாசோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க, பெண் மருந்தாளர்  ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார்.

தனியான தலைவரைத் தெரிவு செய்கிறது 16 பேர் அணி – மெல்லச் சாகும் சுதந்திரக் கட்சி

எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட அணி, தமக்கென தலைவர், தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் போன்ற பதவிகளை விரைவில் உருவாக்கவுள்ளது.

இந்திய- சிறிலங்கா உறவுகள் தொடர்பான ஆவணங்களும் அழிப்பு

இந்திய- சிறிலங்கா உறவுகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட, சிறிலங்கா தொடர்பான 195 ஆவணங்களை, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் அழித்து விட்டதாக, பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

ஓடுபாதையில் வழுக்கி விளக்குகளில் மோதிய சிறிலங்கன் விமானம் – 240 பேர் ஆபத்தில் இருந்து தப்பினர்

கடும் மழைக்கு மத்தியில் இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்தில் தரையிறங்கிய சிறிலங்கன் விமான சேவை விமானம், ஓடுபாதையில் வழுக்கிச் சென்று, விபத்துக்குள்ளாகியதில், 240 பயணிகள் ஆபத்தின்றி தப்பினர்.