மேலும்

நாள்: 12th May 2018

தமிழ்தேசியம்: தமிழ்நாட்டின் இன்றைய தேவை என்ன தேசியம்?

தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன.

போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ளத் தயார்- சிறிலங்கா இராணுவத் தளபதி

போர்க்குற்ற விசாரணைகளை எதிர்கொள்வதற்கு சிறிலங்கா இராணுவம் தயாராக இருப்பதாக, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

புலனாய்வு அதிகாரி கொலை வழக்கின் சந்தேக நபர் திருகோணமலையில் சுட்டுக்கொலை

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரியான லெப்.கேணல் துவான் றிஸ்லி மீடின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான வணிகர் ஒருவர் திருகோணமலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சந்தேக நபரின் ஒளிப்படத்தை வெளியிட்ட திவயின ஊடகவியலாளர் கைது

ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் கடத்தல் வழக்கின் சந்தேகநபரின் ஒளிப்படத்தை பிரசுரித்தமை தொடர்பாக, திவயின சிங்கள நாளிதழின் ஊடகவியலாளர் சமன் கமகே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவன்ட் கார்ட் தலைவரிடம் கையூட்டுப் பெற்ற 300 சிறிலங்கா காவல்துறை உயர் அதிகாரிகள்

அவன்ட் கார்ட் பாதுகாப்புச் சேவை நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதியிடம் 300இற்கும் அதிகமான சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள், பணம் பெற்று வந்துள்ளனர் என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மன்னாரில் இன்று கலந்துரையாடலை ஆரம்பிக்கிறது காணாமல் போனோருக்கான பணியகம்

காணாமல் போனோருக்கான பணியகம் பிராந்திய மட்டத்திலான கலந்துரையாடல்களை இன்று ஆரம்பிக்கவுள்ளது. இந்தப் பணியகம் அமைக்கப்பட்ட பின்னர், முதலாவது கலந்துரையாடல் மன்னாரில் இன்று இடம்பெறவுள்ளது.

பெண் பணியாளர்களுக்கு 84 நாட்கள் பிரசவ விடுமுறை

பெண் பணியாளர்களுக்கான பிரசவ விடுமுறையை 84 நாட்களுக்கு நீடிப்பதற்கான இரண்டு சட்டத் திருத்த பிரேரணைகளை சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.