மேலும்

நாள்: 22nd May 2018

மைத்திரியை கைவிட்டு வந்தால் தான் ‘மொட்டு’ கட்சியில் இடம் – பீரிஸ் நிபந்தனை

மைத்திரிபால சிறிசேனவின் தலைமையைக் கைவிட்டு வந்தால் தான், சிறிலங்கா அரசாங்கத்தை விட்டு வெளியேறிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தம்முடன் இணைத்துக் கொள்ள முடியும் என்று, சிறிலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவில் யானையின் சாவுக்கு காரணமான சிறிலங்கா இராணுவ கப்டன் கைது

முல்லைத்தீவு- தேராவில் பகுதியில் காட்டு யானை ஒன்று மரணமடைந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜனின் பெயர் பரிந்துரை

சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் பதவிக்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பெயர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் இருந்து வெளியேறுகிறார் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்

ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, அரசாங்கத்தில் இருந்து விலகி, சுதந்திரமாகச் செயற்பட முடிவு செய்துள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

போரில் இறந்த அனைவரும் நினைவுகூரப்பட வேண்டும்- சந்திரசிறி கஜதீர

போரில் இறந்தவர்கள் எந்தத் தரப்பினராக இருந்தாலும் அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவை இன்று சமர்ப்பிக்கிறது ஜேவிபி

நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ஒழிக்கும் வகையிலான 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரவை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாக, ஜேவிபி தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் பல பகுதிகள் வெள்ள ஆபத்தில் – 12 மாவட்டங்களில் 23 ஆயிரம் பேர் பாதிப்பு

சிறிலங்காவில் கடந்த சில நாட்களாக கொட்டி வரும் மழை மற்றும் சூறைக்காற்று, மின்னல் போன்றவற்றினால், 6 பேர் பலியாகினர். அத்துடன் 12 மாவட்டங்களில் 1024 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் 22,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவில் கொட்டித் தீர்த்த மழை- 300 மி.மீற்றருக்கும் அதிகம்

சிறிலங்காவின் பல இடங்களில் நேற்று 300 மி.மீ இற்கும் அதிகமான கனமழை பெய்துள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.