கடைசி நேரத்தில் பிற்போடப்பட்டது சுதந்திரக் கட்சி மத்திய குழுக் கூட்டம்
கொழும்பு அரசியல் அரங்கில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கடைசி நேரத்தில் பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்த கூட்டு அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிப்பதா- விலகிக் கொள்வதா என்று இன்றைய மத்திய குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூறியிருந்தது.
எனினும், காரணம் ஏதும் கூறப்படாமல் இன்றைய மத்திய குழுக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.
கூட்டு அரசாங்கத்தில் நீடிப்பது தொடர்பான விடயத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இரண்டு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.
இந்தக் குழப்பம் நீடிப்பதாலேயே இன்றைய மத்திய குழுக் கூட்டம் பிற்போடப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.