மேலும்

நாள்: 4th April 2018

மக்கள் ஆணையை நிறைவேற்றுங்கள் – மைத்திரியிடம் வலியுறுத்திய சம்பந்தன்

2015 அதிபர் தேர்தலின் போது அளித்த மக்கள் ஆணையை நிறைவேற்றுமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கூட்டணிக் கட்சிகள் ரணிலுக்கு ஆதரவு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில், அதனை எதிர்த்து வாக்களிக்க, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐதேகவின் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் முடிவு செய்துள்ளன.

மனச்சாட்சிப்படி வாக்களிக்க சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு அனுமதி

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனச்சாட்சிப்படி வாக்களிக்க அனுமதிக்கப்படவுள்ளனர்.