சம்பந்தனின் ஆசனத்தில் அமர்ந்து ஒத்திகை பார்த்த மகிந்த
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று அமர்ந்து கொண்டார். அதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று அமர்ந்து கொண்டார். அதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் இன்று கையளித்தனர்.
ஜெனிவாவில் இன்றைய சிறிலங்கா தொடர்பான அமர்வின் போது, அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று, அமெரிக்காவிடம் வலியுறுத்தியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்க பாணியிலான உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதாக அளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முகநூல் மூலம் இனங்களுக்கு இடையில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், வெறுப்புணர்வு கருத்துக்களை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரியை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய, ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் அம்மையாருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையினர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
இழப்பீடுகளை வழங்குவதற்கான பணியக சட்டவரைவு விரைவில் அரசிதழில் வெளியிடப்படும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வரும் விடயத்தில், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்குச் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், உலகத் தமிழர் பேரவையி்னருடன் இணைந்து, ஐ.நா மற்றும் அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தி வருகிறார்.
தமிழர்களைப் பொறுத்தவரையில் உலகளாவிய அரசியல் சிந்தனைகள் அல்லது அரசியல் ஆய்வறிவு ஆகியன மிகக் குறைவாகவே கணக்கில் எடுக்கப்படுகின்றன என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.