மேலும்

மாதம்: March 2018

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ரஷ்யாவுக்கு இரகசியப் பயணம்

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு நடந்ததா? – அருட்தந்தை சக்திவேல் விளக்கம்

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சிறிலங்கா அதிபர் சந்திக்கவில்லை என்று கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்து- அதிபரின் ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பை நிராகரித்துள்ளார், அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல்.

இரண்டாவது போர்க்கப்பலையும் சிறிலங்காவிடம் கையளித்தது இந்தியா

இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட 2500 தொன் எடையுள்ள பாரிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று சிறிலங்காவிடம் கையளிக்கப்பட்டது.

ரணிலைப் பதவி நீக்க 113 வாக்குகள் தேவையா?

நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் சமூகமளித்திருக்கும் உறுப்பினர்களின் சாதாரண பெரும்பான்மையே போதுமானது என்று மூத்த நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பயண கண்காணிப்பு பட்டியலில் நாமல்?

மகிந்த ராஜபக்சவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அமெரிக்காவுக்குள் நுழைய, தடைவிதிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து வெளியிட அமெரிக்கத் தூதரகம் மறுத்துள்ளது.

சீனாவின் இறுக்கமான பிடியில் சிறிலங்காவின் அமைதியான துறைமுகம்

சிறிலங்காவின் தெற்கிலுள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகமானது ஆட்கள் நடமாட்டமில்லாத பாலைவனமாகக் காட்சியளிக்கின்றது. கடந்த மாத நடுப்பகுதியில் ஒரு நாள் பிற்பகல் இதன் வாயிலுள்ள தேநீர்ச் சாலையில் நின்ற போது ஒரு சில வாகனங்களை மட்டுமே காணமுடிந்தது.

காலி, நீர்கொழும்பு மாநகரசபைகளில் ஐதேகவை மண் கவ்வ வைத்த மகிந்த கட்சி

காலி, நீர்கொழும்பு மாநகரசபைகளில் அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய போதும், இந்த இரு மாநகரசபைகளின் முதல்வர் பதவிக்கான தேர்தல்களில் மகிந்த ராஜபக்சவின்  சிறிலங்கா பொதுஜன முன்னணியிடம், ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது.

சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது – ஐ.நா நிபுணர்

சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் பொறிமுறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது  என்று  உண்மை, நீதி, இழப்பீடு மற்றும்  மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்  பப்லோ டி கிரெய்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நுழைவிசைவு இருந்தும் தடுக்கப்பட்டேன் – நாமல் ராஜபக்ச

தம்மிடம் செல்லுபடியாகக் கூடிய அமெரிக்க நுழைவிசைவு இருந்த போதிலும், தாம் அமெரிக்காவுக்குள் நுழைவது தடுக்கப்பட்டதாக சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

சிறிலங்கா அதிபரை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருந்த பாகிஸ்தான் அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் அதிகாரபூர்வ  பயணமாக நேற்று இரவு பாகிஸ்தான் சென்றடைந்துள்ளார்.