மேலும்

அமெரிக்காவின் பயண கண்காணிப்பு பட்டியலில் நாமல்?

eagle-flag-usaமகிந்த ராஜபக்சவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அமெரிக்காவுக்குள் நுழைய, தடைவிதிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து வெளியிட அமெரிக்கத் தூதரகம் மறுத்துள்ளது.

நேற்றுமுன்தினம் மொஸ்கோவில் இருந்து அமெரிக்காவுக்குச் செல்ல முற்பட்ட நாமல் ராஜபக்ச, அமெரிக்க அதிகாரிகளின் உத்தரவின் பேரில், விமானத்தில் ஏறவிடாமல் தடுக்கப்பட்டார்.

இதுகுறித்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் கருத்தை அறிய ஊடகங்கள் முற்பட்ட போது, தனிநபர்களின் நுழைவிசைவு விவகாரங்கள் பற்றிப் பேசுவதற்கு அமெரிக்க சட்டம் தம்மைத் தடுப்பதாக பதிலளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சிறிலங்காவில் பணச்சலவை குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் நாமல் ராஜபக்ச, அமெரிக்காவின் பயண கண்காணிப்பு பட்டியலில் (Travel watch list)  உள்ளடக்கப்பட்டிருக்கலாம் என்று ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *