மேலும்

மாதம்: March 2018

கண்டியில் முஸ்லிம்களின் பெருமளவு சொத்துக்கள் அழிவு

கண்டி மாவட்டத்தில் உள்ள திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளில் நடத்தப்பட்ட இனவாத தாக்குதல்களில் முஸ்லிம்களின் பெரும் எண்ணிக்கையான வீடுகள், சொத்துகளும், பள்ளிவாசல்களும் அழிக்கப்பட்டுள்ளன.

கண்டி மாவட்டம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு – பாதுகாப்பு அதிகரிப்பு (படங்கள்)

கண்டி மாவட்டம் முழுவதும், இன்று மாலை 6 மணி தொடக்கம் மீண்டும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் அவசரகாலச்சட்டம் பிரகடனம்

உடனடியாக நடைமுறைக்கு வரும்  வகையில் அவசரகாலச்சட்டத்தைப் பிரகடனம் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் இன்று முடிவு செய்துள்ளது. இன்று முற்கபல் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கண்டியில் மீண்டும் ஊரடங்கு – இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதால் பதற்றம்

கண்டி மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்ட போதிலும், தெல்தெனிய, பல்லேகல  காவல்துறை பிரிவுகளில் மீண்டும் உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் சட்டவரைவு மீது நாளை விவாதம்

பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் சட்டவரைவு மீதான விவாதம், நாளை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை வழிநடத்திய பௌத்த பிக்குகள்

கண்டியில் வன்முறைகள் வெடித்ததன் பின்னணியில் பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரும், மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருமே இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், 27 வாணிப நிலையங்கள், வீடுகள் தீக்கிரை

கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் திகண பகுதியில் நேற்று நடத்தப்பட்ட இனவாத தாக்குதல்களின் போது, முஸ்லிம்களுக்குச் சொந்தமான 27 வாணிப நிலையங்கள், பல வீடுகள், ஒரு பள்ளிவாசல் என்பன தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனைய பகுதிகளுக்கும் வன்முறை பரவும் ஆபத்து – பதற்றத்தில் முஸ்லிம்கள்

கண்டியில் ஏற்பட்டுள்ள இனமோதல்கள் சிறிலங்காவின் ஏனைய பகுதிகளுக்கும் பரவக் கூடிய ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டியில் வன்முறைகளைத் தடுக்க சிறிலங்கா இராணுவமும் களமிறக்கம்

கண்டியில் நேற்று வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து, சிறிலங்கா இராணுவமும் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் – இன மோதல்கள் வெடிக்கும் ஆபத்து

சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கிடையில் தோன்றியுள்ள பதற்ற நிலையைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.