மேலும்

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – இரட்டைவேடம் போடும் மகிந்த

mahinda-rajapakshaசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இரட்டைவேடம் போடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணி நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது.

இதற்காக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது.

கையெழுத்துப் பெறப்படும் ஆவணம் ஒன்று ஊடகங்களுக்குக் கிடைத்துள்ளது.

அதில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. எனினும், 18 உறுப்பினர்கள் மாத்திரம் கையெழுத்திட்டுள்ளனர்.

அதில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள, கூட்டு  எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தனவும், சமல் ராஜபக்சவும்  இன்னமும் கையெழுத்திடவில்லை.

அதேவேளை, இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் மகிந்த ராஜபக்சவும் இன்னமும் கையெழுத்திடவில்லை. அவரது பெயரும் அந்த ஆவணத்தில் இடம்பெறவில்லை.

மகிந்த ராஜபக்ச இதில் கையெழுத்திட வேண்டுமா -இல்லையா என்பது பற்றி இன்னமும் கூட்டு எதிரணி முடிவு செய்யவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *