தாஜுதீன் கொலையை நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்தனர்
வாசிம் தாஜுதீன் கொலையை நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று தாஜுதீன் கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த குற்றங்களை கிராமத்தில் சிறிபால அல்லது ஞானரத்தினம் செய்யவில்லை.
இந்த குற்றங்களை நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்தனர். அவர்கள் குற்றங்களை மூடி மூடி மறைத்தனர்.
வாசிம் தாஜுதீன் 2012 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டார், 2015 இல் பிணை முறி மோசடி மற்றும் 2019 இல் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
சம்பந்தப்பட்டவர்கள் அரசியலில் ஈடுபட்டார்களா இல்லையா என்ற வேறுபாடின்றி, விசாரணைகளின் அடிப்படையில் சட்டம் செயற்படுத்தப்படும்.
இந்த குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் அரசாங்கம் தலையிடாது” என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.