மேலும்

யாழ்ப்பாணம், முல்லைத்தீவில் மர்மமான தொற்றுநோய் மரணங்கள் நிகழவில்லை – ஆய்வுகளில் உறுதி

Health Ministry -sri lankaஅண்மையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்றதாக கூறப்பட்ட சந்தேகத்துக்கிடமான மரணங்கள், இயற்கையானவையே என்றும், அதில் எந்த மர்மமும் இல்லை என்றும், சிறிலங்கா சுகாதார அமைச்சின் தொற்றுநோயில் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்ற பல மரணங்கள் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து ஆய்வு நடத்த சிறிலங்கா சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து நடத்தப்பட்ட ஆய்வுகளில், இந்த மரணங்கள் நோய்த்தொற்றுகளால் இடம்பெற்றவை அல்ல என்றும், இயற்கையான காரணங்களால் நிகழ்ந்தவை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாக மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுவது அடிப்படையற்றது, விஞ்ஞான ரீதியாக அது நிரூபிக்கப்படவில்லை என்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *