மேலும்

அமெரிக்க – சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுக்கிடையில் இரண்டாவது பேச்சு

us-lanka navy talksஅமெரிக்க, சிறிலங்கா கடற்படை உயர் அதிகாரிகளுக்கு இடையிலான, இரண்டாவது அதிகாரிகள் மட்டப் பேச்சு நடந்து முடிந்துள்ளது.

கொழும்பிலுள்ள சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் இந்தப் பேச்சு கடந்த மே 16, 17ஆம் நாள்களில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் குழுவுக்கு, கடற்படையின் நடவடிக்கைப் பணிப்பாளர்  றியர் அட்மிரல்  பியால் டி சில்வா தலைமை தாங்கினார்.

us-lanka navy talks

அமெரிக்க கடற்படையின் 7 ஆவது பசுபிக் கப்பல் படைப்பிரிவு சார்பிலான அதிகாரிகள் குழுவுக்கு கப்டன் பிரையன் அன்டர்சன் தலைமை தாங்கியிருந்தார்.

இரண்டு நாடுகளினதும் கடற்படைகளுக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டது.

ஒரு கருத்து “அமெரிக்க – சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுக்கிடையில் இரண்டாவது பேச்சு”

  1. Arinesaratnam Gowrikanthan says:

    அமெரிக்காவின் தெற்காசியா பிராந்திய இளநிலைப் பங்காளியாக இருந்த பாக்கிஸ்தானை தள்ளிவிழுத்திவிட்டு அந்த இடத்தை இந்தியா தான கைப்பற்றிக் கொள்வதில் வெற்றிபெற்றுள்ளது உண்மைதான். ஆனால், அதற்காக தனது தெற்காசிய முகவராக இந்தியாவை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளமாட்டாது. இந்தியாவைப் புறந்தள்ளிவிட்டு, இந்தியாவின் அயல் நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளை தானே நேரடியாகக் கையாண்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *