மேலும்

சசிகலாவுக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம் – தமிழக அரசியலில் திருப்பம்

vk-sasikalaசொத்துக்குவிப்பு வழக்கில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுக பொதுச்செயலர் சசிகலா உள்ளிட்ட நால்வருக்கும் வழங்கப்பட்ட தண்டனையை இந்திய உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுக பொதுச்செயலர் சசிகலா உள்ளிட்ட நால்வருக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த நான்கு ஆண்டு சிறைத்தண்டனையை ரத்துச் செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இந்திய உச்சநீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.

சற்றுமுன்னர் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தவர, ஏனைய குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரையும் உடனடியாக கர்நாடக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழ்நாடு அரசியலில் கடந்த சில நாட்களாக நிலவிவந்த உறுதியற்ற நிலை தீவிரமடைந்துள்ளது.

முதலமைச்சராகப் பதவியேற்க ஆளுனரிடம் அனுமதி கோரியிருந்த அதிமுக பொதுச்செயலர் சசிகலாவுக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தண்டனை வழங்கப்பட்டுள்ள சசிகலா எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பு வெளியானதையடுத்து, கூவத்தூரில் தமக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்களுடன் சசிகலா தங்கியுள்ள விடுதியை 1000இற்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிரடியாக சுற்றிவளைத்துள்ளனர். அதிரடிப்படையினர், கலகம் அடக்கும் காவல்துறையினரும் களத்தில் இறக்ப்பட்டுள்ளனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *