மேலும்

Tag Archives: ஜெயலலிதா

பிரபாகரன் சரணடையும் எண்ணம் கொண்டவரல்ல – இந்திய தொலைக்காட்சிக்கு மகிந்த செவ்வி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு சரணடைய வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் சரணடையும் எண்ணம் உள்ளவர் அல்ல என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சசிகலாவுக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம் – தமிழக அரசியலில் திருப்பம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுக பொதுச்செயலர் சசிகலா உள்ளிட்ட நால்வருக்கும் வழங்கப்பட்ட தண்டனையை இந்திய உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

துக்ளக் ஆசிரியர் ‘சோ’ காலமானார்

தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் துக்ளக் இதழின் ஆசிரியரும், பிரபல அரசியல் விமர்சகரும், நடிகருமான சோ என்று அழைக்கப்படும் சோ.ராமசாமி (வயது-82) இன்று அதிகாலை காலமானார்.

இன்று மாலை 4.30 மணியளவில் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் – புதிய முதல்வரானார் ஓ.பி.

மாரடைப்பினால், நேற்றிரவு மரணமான தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்.சமாதி அருகே நல்லக்கம் செய்யப்படவுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா காலமானார்

தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காலமாகி விட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான அதிகாரபூர்வ தகவல் இன்று சற்று நேரத்தில் அப்பல்லோ நிர்வாகத்தால் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவலைக்கிடமான நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா – அப்பல்லோ அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாரடைப்பு ஏற்பட்ட ஜெயலலிதாவுக்கு இன்று அதிகாலை சிறு அறுவைச்சிகிச்சை

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்றுமாலை ஏற்பட்ட மாரடைப்பை அடுத்து, அவருக்கு இன்று அதிகாலை சிறு அறுவைச் சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பம் – இரு தொகுதிகளில் ஒத்திவைப்பு

தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரி சட்டமன்றங்களுக்கான தேர்தல் இன்று இடம்பெறவுள்ளது. இன்று காலை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை வாக்களிப்பு இடம்பெறும்.

ஜெயலலிதாவை எதிர்த்து 45 பேர் போட்டி – சூடுபிடிக்கிறது தமிழ்நாடு தேர்தல் களம்

எதிர்வரும், 16ஆம் நாள் நடக்கவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும், 3,794 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக, தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், அதிகபட்சமாக, முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மட்டும், 45 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் ஜெயலலிதா

தமிழ்நாடு முதலமைச்சராக ஜெயலலிதா, ஐந்தாவது தடவையாக இன்று பதவியேற்றார். அவருடன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 28 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.