மேலும்

அணை மற்றும் பாதை திட்டம் சிறிலங்காவுடன் உறவுகளைப் பலப்படுத்தும் – சீனப் பிரதமர்

ranil-Li Keqiang (1)சீன- சிறிலங்கா இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையிட்டு, சீன- சிறிலங்கா பிரதமர்களும், தமக்கிடையில் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டிருக்கின்றனர்.

1957ஆம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையில் முறையான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதில் இருந்து, உறவுகளில் நிலையான அபிவிருத்தியை பேணி வந்ததுடன், அதனை வலுப்படுத்தியுள்ளன என்று சீனப் பிரதமர் லி கெகியாங் தெரிவித்துள்ளார்.

அண்மைய ஆண்டுகளாக இரண்டு நாடுகளும்  பரந்துபட்ட ஒத்துழைப்பையும், உறவுகளையும் பலப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாக அணை மற்றும் பாதை திட்டத்தைப் பயன்படுத்தியுள்ளன.

மரபுசார் நட்பையும், ஆழமான ஒத்துழைப்பையும் பயன்படுத்தி, சீன- சிறிலங்கா மூலோபாய கூட்டானது இன்னும் சாதனைகளை அடைய முடியும், அதற்காக சிறிலங்காவுடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புகிறது என்றும் சீனப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ஒரு பாதை ஒரு அணை திட்டத்தின் மூலம், இரண்டு நாடுகளுக்கு புதிய பரப்புகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வாய்ப்புகளை அளித்துள்ளது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாட்டு மக்களுக்கும் நன்மையளிக்கும் வகையில், சீனாவுடன் சிறிலங்கா ஆழமான இருதரப்பு உறவுகளையும், பரந்துபட்ட ஒத்துழைப்பையும் தொடர்ந்து பேணும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *