மேலும்

Tag Archives: குடியுரிமை

அமெரிக்க குடியுரிமையை இழந்தார் கோத்தா? – கடவுச்சீட்டு ஒப்படைப்பு

gotaஅமெரிக்க குடியுரிமையை துறக்க முடிவு செய்துள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, தமது  அமெரிக்க கடவுச்சீட்டை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார்.

பொன்சேகாவிடம் சிக்கும் கோத்தாவின் ‘குடுமி’ – புதிய ‘செக்’ வைக்கிறது ஐதேக

கோத்தாபய ராஜபக்சவுக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலேயே, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை உள்நாட்டு விவகார அமைச்சர் பதவிக்கு நியமிக்க ஐதேக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலப்பு விசாரணை, காலவரம்பு, கண்காணிப்பு செயலக கோரிக்கைகளை சிறிலங்கா நிராகரிப்பு

சிறிலங்காவில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் செயலகம் ஒன்றை அமைக்கவும், தெளிவான காலவரம்புக்குட்பட்ட நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை அமைக்கவும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்த பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

கோத்தாவை வேட்பாளராக அறிவிக்க மகிந்த முடிவு– அமெரிக்க குடியுரிமையை துறக்க விண்ணப்பம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளார்.

மீண்டும் அமெரிக்கா பறக்கிறார் கோத்தா – நீதிமன்றம் அனுமதி

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மீண்டும் அமெரிக்காவுக்குப் பயணமாகவுள்ளார் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க குடியுரிமையை கைவிட பசிலும், கோத்தாவும் விண்ணப்பித்தனரா?

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்வதற்கு விண்ணப்பித்தார்களா என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அஷூ மாரசிங்க கோரியுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின் புதிய பிரதமர் – வெளியேற்றப்படுவாராம் ரணில்

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவை, பிரதமர் பதவியில் இருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி வெளியேற்றும் என்று அந்தக் கட்சியின் பேச்சாளரான இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபருக்கு சியோல் பெருநகரத்தின் கௌரவ குடியுரிமை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, தென்கொரியாவின், சியோல் பெருநகர அரசாங்கம், கௌரவ குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளது.

இரட்டைக் குடியுரிமை கொண்ட சிறிலங்கா தூதுவர்கள் மாட்டினர்

வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற சிறிலங்காவின் மூன்று தூதுவர்கள் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கண்டறிந்துள்ளது.

இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களைக் கோருகிறார் கம்மன்பில

இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களைத் தருமாறு சிறிலங்கா குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.