மேலும்

சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் சீன பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு

general-chang-wanquan-karunasena-hettiatrachchi-1சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பீஜிங்கில் கடந்த 11ஆம் நாள் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக சீன பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

ஏழாவது ஷியாங்சான் பாதுகாப்புக் கருத்தரங்கின் பக்க நிகழ்வாகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவுடன் இணைந்து செயற்பட சீன இராணுவத் தயாராக இருப்பதாக சீன பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

general-chang-wanquan-karunasena-hettiatrachchi-1general-chang-wanquan-karunasena-hettiatrachchi-2

இருதரப்பு பாதகாப்பு உறவுகளை வலுப்படுத்தவும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பையும், இருதரப்பு மூலோபாய கூட்டை வலுப்படுத்தவும், அவர் விருப்பம் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *