மேலும்

க.பொ.த சாதாரணதரத் தேர்வில் முதல் 12 இடங்களுக்குள் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் இல்லை

examக.பொ.த சாதாரணதரத் தேர்வு பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில், இந்தத் தேர்வில் முதல் 12 இடங்களுக்குள், தமிழ், முஸ்லிம் மாணவர்கள் எவரும் இடம்பெறவில்லை.

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் நடந்த க.பொ.த சாதாரணதரத் தேர்வு  பெறுபேறு நேற்றுமாலை வெளியிடப்பட்ட நிலையில், முதல் 12 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பெயர் விபரங்களை தேர்வுத் திணைக்களம் வெளியிட்டது.

இதன்படி, முதல் 12 இடங்களைப் பிடித்த மாணவர்களில், ஒன்பது பேர் மேல்  மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.

முதலாவது இடத்தை கொழும்பு விசாகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சத்சரணி ஹெற்றியாராச்சி என்ற மாணவி பிடித்துள்ளார்.

கொழும்பு நாலந்தா கல்லூரி மாணவர் சமல் புன்சர இரண்டாமிடத்தையும், கொழும்பு தேவி பாலிகா வித்தியாலய மாணவி மலீனா இரத்நாயக்கவும், கண்டி மகாமய பாலிகா வித்தியாலய மாணவி இந்தீவரி உமயங்க குமாரி இரத்நாயக்கவும், மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனர்.

இவர்களை அடுத்து முதல் 12 இடங்களை கொழும்பு, கம்பகா, கண்டி, காலி, மாத்தறை மாவட்ட மாணவர்களே பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு சிறிலங்காவின் வரலாற்றிலேயே அதிகளவாக 664,537மாணவர்கள் இந்தத் தேர்வில் தோற்றியிருந்தனர்.

எனினும், தமிழ், முஸ்லம் மாணவர்கள் எவரும் இம்முறை முதல் 12 இடங்களுக்குள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *