மேலும்

யோசிதவின் விளக்கமறியல் உத்தரவை ரத்துச்செய்ய மேல் நீதிமன்றம் மறுப்பு

Supreme Courtயோசித ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதிவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செல்லுபடியற்றதென கட்டளை பிறப்பிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மேல்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

யோசித ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ள, கடுவெல நீதிமன்றத்தின் உத்தரவை ரத்துச் செய்து, பிணை வழங்குமாறு கோரி, யோசித ராஜபக்ச சார்பாக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று இரண்டாவது தடவையாக விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையை பார்வையிட, மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோரும் மேல்நீதிமன்றம் வந்திருந்தனர்.

விசாரணையின் போது, கடுவெல நீதிமன்ற உத்தரவை ரத்துச் செய்து உத்தரவு பிறப்பிக்குமாறு யோசித ராஜபக்சவின் சட்டவாளர்கள் கோரினர்.

பிணை மனுவைக் கருத்தில் கொள்ளாமல் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக யோசிதவின் சட்டவாளர்கள் வாதிட்டனர்.

ஆனால், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் விசாரணைகளுக்கு சந்தேக நபர்கள் தேவையான ஒத்துழைப்பைக் கொடுக்காத நிலையில், பிணைச் சட்டத்தின் கீழ் தான், அவர்களை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக கூறி, அந்த உத்தரவை ரத்துச் செய்ய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஹெரியந்துடுவ மறுப்புத் தெரிவித்தார்.

யோசிதவின் சட்டவாளர்களை எதிர்மனுத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கை மார்ச் 8ஆம் நாள் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *