மேலும்

மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி – ‘எட்டாத பழம் புளிக்கும்’ என்கிறார் சம்பந்தன்

sampanthanமாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி போன்ற சலுகைகளை சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து பெறுவது அரசியல் தீர்வு என்ற இலக்கைப் பலவீனப்படுத்துவதாக அமையும் என்று கருத்து வெளியிட்டுள்ளார் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி வழங்கப்படாத நிலையிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதல் ஆசனங்களை வென்ற மட்டக்களப்பு , யாழ்ப்பாணம் மற்றும் வன்னி ஆகிய மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுத்  தலைவர் பதவியை  வழங்க சிறிலங்கா அதிபரும், பிரதமரும் இணக்கம் தெரிவித்திருந்தனர்.

அந்த வாக்குறுதியை மீறும் வகையில், பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்  யாழ்ப்பாண மாவட்டத்துக்கும், அமைச்சர்  ரிசாத் பதியுதீன் வன்னி மாவட்டத்துக்கும், பிரதியமைச்சர்  அமீர் அலி மட்டக்கப்பு மாவட்டத்துக்கும் அபிவிருத்திக் குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,“இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்ற இலக்கை கொண்டுள்ள எமது பயணத்தில் இதனை ஒரு முக்கிய விடயமாக நாங்கள் கருதவில்லை.

சிறிலங்கா அரசிடமிருந்து இதுபோன்ற சலுகைகளைப் பெறுவது எமது அரசியல் தீர்வு என்ற இலக்கை பலவீனப்படுத்துவதாக அமையும்.

இந்த நியமனத்தில் சிறிலங்கா அரசாங்கம் நியாயமாக நடந்து கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் இருந்தது.

தேவை ஏற்படும் பட்சத்தில் இது தொடர்பாக சிறிலங்கா அதிபருடனும்,  பிரதமருடனும் பேச்சு நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *