மேலும்

Tag Archives: ஐ.நா விசாரணை

அமெரிக்க குழுவை கடற்படை முகாமுக்குள் அனுமதிப்பதே குற்றம் – என்கிறார் ராஜித சேனாரத்ன

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் அமெரிக்க குழுவை அனுமதிப்பதே தவறு, ஐ.நா.குழுவினரை அனுமதித்ததால் எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் கிடையாது என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சமந்தா பவரும் சிறிலங்கா தொடர்பான அமெரிக்க கொள்கையும்

சிறிசேன அரசாங்கத்துடன் அமெரிக்கா தொடர்ந்தும் நல்லுறவைப் பேணவிரும்பினால், போரின் போது இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக் கூறுமாறும்,  குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அமெரிக்காவினால் அழுத்தம் கொடுக்க முடியாது போகலாம்.

சிறிலங்கா இராணுவம் மீது போர்க்குற்றம் சுமத்தவில்லையாம் – கூறுகிறார் பரணகம

தமது ஆணைக்குழு முன்வைத்த அறிக்கையில், சிறிலங்கா இராணுவத்தின் மீது போர்க்குற்றம் சுமத்தும் வகையில்  எந்த விடயங்களையும் முன்வைக்கவில்லை  என்று, காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர்  ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

மின்சார நாற்காலிக்கும் கலப்பு விசாரணைக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டோம் – சிறிலங்கா அதிபர்

மின்சாரக் நாற்காலிக்கும் கலப்பு விசாரணைக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும், ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளடங்கியுள்ள  உள்ளக விசாரணைப்  பொறிமுறை தொடர்பாக விரைவில் அனைத்துக் கட்சி மாநாட்டை கூட்டி கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

சிறிலங்காவில் நிகழ்ந்தது இனப்படுகொலை இல்லையா? – ஐ.நா பேச்சாளர் பதில்

சிறிலங்காவில் இடம்பெற்றது இனப்படுகொலையா என்பது, நாம் பரிந்துரைத்துள்ள கலப்பு நீதிமன்றத்தை உள்ளடக்கிய குற்றவியல் விசாரணைகளின் பின்னரே கண்டறியப்பட வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணயகத்தின் பேச்சாளர் ரவினா சம்தாசனி தெரிவித்துள்ளார்.

கலப்பு நீதிமன்ற விவகாரம் – நாடாளுமன்றில் அவசர விவாதம் நடத்தக் கோருகிறார் விமல் வீரவன்ச

போர்க்குற்றங்கள் குறித்து கலப்பு விசாரணை நடத்தக் கோரும், ஐ.நா விசாரணை அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் அவசர விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று, சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், மனுவொன்றைக் கையளித்துள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச.

சிறிலங்காவில் அனைத்துலக பங்களிப்புடன் உள்நாட்டு விசாரணை – அமெரிக்கா வலியுறுத்துகிறது

சிறிலங்காவில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கு, அனைத்துலக சமூகத்தின் கணிசமான பங்களிப்புடன், உள்நாட்டு விசாரணை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ஜெனிவாவில் அடுத்தவாரம் சிறிலங்கா குறித்த தீர்மானம்

சிறிலங்கா தொடர்பான தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்தவாரம் முன்வைக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஐ.நா அறிக்கை: முடிவல்ல, ஆரம்பம் தான் – என்கிறார் ஐ.நா பேச்சாளர்

சிறிலங்கா குறித்த ஐ.நா விசாரணை அறிக்கை முடிவல்ல. இது ஒரு ஆரம்பமாகத்தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ரூபேர்ட் கொல்வில்.

விசாரணை அறிக்கை மிகத்தீவிரத்தன்மை கொண்டது – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்கா தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையை நாளை மறுநாள் வெளியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், இந்த அறிக்கையின் கண்டறிவுகள் மிகத் தீவிரத் தன்மை கொண்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.