மேலும்

ஒற்றையாட்சி குறித்த மைத்திரியின் வாதம் சிறுபிள்ளைத்தனம் – யதீந்திரா

jathindra-tna (1)சிறிலங்கா ஒரு ஒற்றையாட்சி நாடாக இருப்பதுதான் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பிற்கு நல்லது என்று மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பது, சிறு பிள்ளைத்தனமான வாதம்  என்று அரசியல் ஆய்வாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான யதீந்திரா தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, உவர்மலையில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,

நாங்கள் பேரம் பேசுவதற்கான மக்கள் ஆணையொன்றை கோருகிறோம் ஆனால் ஒரு உண்மையை நாங்கள் மறந்துவிடக் கூடாது. பேரம் பேசல் அரசியலின் தோல்வியில் இருந்து தான் ஆயுதப் போராட்டம் தோற்றம்பெற்றது.

இன்று எங்களிடம் ஒரு பட்டறிவு உண்டு. அதாவது, சிங்கள ஆட்சியாளர்களை நம்பி நாங்கள் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபட முடியாது. இத்தனை அழிவுகளுக்கு பின்னரும் சிங்கள ஆட்சியாளர்கள் தங்களின் மேலாதிக்க போக்குகளை கைவிட்டதற்கான சான்றுகள் எதனையும் எங்களால் காணமுடியவில்லை.

இன்று தெற்கின் தேர்தல் மேடைகளில் பேசுகின்ற அனைத்து சிங்கள தலைவர்களும் கிட்டத்தட்ட ஒரே குரலில்தான் பேசுகின்றனர். அவர்கள் அனைவரும் ஒற்றையாட்சியை பேணிக் கொள்ள வேண்டும் என்கின்றனர்.

எங்களுடைய சமஸ்டி கோரிக்கையை இப்போதும் பிரிவினை என்று சொல்லக் கூடிய நிலையில்தான் அவர்களது அரசியல் அணுகுமுறை இருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் சமஸ்டி பிரிவினை இல்லை என்பது நன்றாக தெரியும்.

ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்கனவே கட்டமைக்கப்பட்டிருக்கும் தமிழர் விரோத அரசியலை அவர்கள் தொடர்ந்தும் பேணிக்கொள்ளும் வகையிலேயே செயலாற்றி வருகின்றனர்.

jathindra-tna (1)jathindra-tna (2)

அண்மையில் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா ஒரு ஒற்றையாட்சி நாடாக இருப்பதுதான் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பிற்கு நல்லது என்று கூறியிருக்கின்றார். உண்மையில் இது சிறு பிள்ளைத்தனமான வாதமாகும்.

சிங்கள ஆட்சியாளர்கள் ஒற்றையாட்சி கோட்பாட்டை கட்டியணைத்துக் கொண்டிருந்ததன் விளைவாகத்தான், இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு கேள்விக்குளாகியது. இத்தனை அனுபவங்களுக்கு பின்னரும் கூட, இதனை மைத்திரிபால சிறிசேனவால் விளங்கிக் கொள்ள முடியவில்iலை என்றால் அவர் குறித்து நாங்கள் அனுதாபப்படத்தான் முடியும்.

இன்றைய சூழலில் எங்களிடம் இருக்கின்ற ஒரேயொரு ஆயுதம் இந்த அனைத்துலக அழுத்தம் ஒன்றுதான். அனைத்துலக அழுத்தம் தொடர்பில் பேசுகின்ற போது நாங்கள் ஒரு விடயத்தை மறந்துவிடக் கூடாது.

போரை தடுத்து நிறுத்துவதற்கு எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளாத அமெரிக்கா போரின் விளைவுகளை வைத்து மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகித்தது. இதன் தொடர்ச்சியாக மூன்று பிரேரணைகளை கொண்டு வந்தது.

இவ்வாறெல்லாம் அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு மாறாக போரின் இறுதிக் கட்டத்தின் போது மகிந்த மற்றும் கோத்தாபயவிற்கு உத்தரவிட்டு எங்களுடைய மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த போரை தடுத்து நிறுத்தியிருக்கலாம்.

அமெரிக்கா நினைத்திருந்தால் அது ஒன்றும் முடியாத காரியமல்ல. ஆனால் அதனை அவர்கள் செய்யவில்iலை. ஏனெனில் விடுதலைப் புலிகள் இயக்கம் பூண்டோடு அழிக்கப்பட்ட வேண்டும் என்பதில் அமெரிக்கா தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது.

அண்iமையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி இதனை தெளிவாக ஓப்புக்கொண்டிருந்தார். அனைத்துலக அழுத்தம் பற்றி பேசுகின்ற போது இந்த யதார்த்தத்தையும் நாங்கள் மறந்துவிடக் கூடாது.

அவர்கள் தங்களின் நலன்களுக்காக சிறிலங்கா மீது போடுகின்ற அழுத்தங்கள்தான் இன்னொரு புறம் எங்களுக்கும் வாய்ப்பாகவும் இருக்கிறது. இதனை நாங்கள் எந்தளவிற்கு சாதகமாக கையாளுகின்றோமோ அந்தளவிற்கு நாங்கள் வெற்றிபெறுவோம்.

ஆனால் இதனை நிச்சயமாக உணர்ச்சிவசமான பேச்சுக்களாலும் வீரக் கதைகளாலும் சாதிக்க முடியாது. உணர்ச்சிகரமான பேச்சுக்களால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்திருக்குமாக இருந்தால், அது காசி ஆனந்தன் வண்ணை ஆனந்தன் காலத்திலேயே நடந்திருக்கும்.

எனவே நிலைமைகளை துல்லியமாக மதிப்பிட்டு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நாங்கள் சாதகமாக கையாள வேண்டும்.” என்று தெரிவித்தார்.]

படங்கள் நன்றியுடன் – எஸ்.எஸ்.குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *