மேலும்

நாள்: 2nd May 2015

மன்னார் ஆயருக்கு கொழும்பு தேசிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சை – பக்கவாதம் தாக்கியது

மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை, பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று மாலை சேர்க்கப்பட்டுள்ளார்.

சிறிலங்காவுக்கு எந்த வழியிலான உதவியை வழங்கவும் தயார் – ஜோன் கெரி வாக்குறுதி

இலங்கையர்கள் தமது எதிர்காலத்தை வடிவமைக்க எந்த வழியிலான உதவிகளையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வாக்குறுதி அளித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமர் ரணிலுடனும் பேச்சு நடத்தினார் ஜோன் கெரி

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், இன்று மதியம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

உள்நாட்டு விசாரணைக்கு நிபுணத்துவ உதவி வழங்குமாறு அமெரிக்காவிடம் சிறிலங்கா கோரிக்கை

போருடன் தொடர்புடைய பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்கு தீர்வு காணப்படும் என்று, சிறிலங்கா வந்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியிடம் சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

சிறிலங்கா அதிபரை சந்தித்தார் ஜோன் கெரி – தேர்தல் வெற்றிக்கு நேரில் வாழ்த்து

இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை சிறிலங்காவுக்கு மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, சற்று முன்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

கெரி வருகைக்கு முன்பாக மகிந்த ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட பேராசிரியர் ரஞ்சித் தேவசிறி

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்தவரும், அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தி அவரைத் தோற்கடிக்க, சிவில் சமூக அமைப்புகளை ஒன்றிணைத்தவருமான, பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி நேற்று கொழும்பில் தாக்கப்பட்டு காயமடைந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் ஜோன் கெரி

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி  பயணம் செய்த  போயிங் 757 விமானம் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜோன் கெரியுடன் சிறிலங்காவுக்கு படையெடுக்கும் மூத்த அமெரிக்க அதிகாரிகள்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியுடன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் மூத்த அதிகாரிகளும் கொழும்பு வரவுள்ளனர். 

பசிலுடன் அதுரலிய ரத்தன தேரர் ஐந்து மணி நேரம் இரகசியப் பேச்சு

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுடன், ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் நேற்று ஐந்து மணி நேரம் பேச்சு நடத்தியுள்ளார்.