மேலும்

நாள்: 18th May 2015

ஆறு ஆண்டுகளாகியும் உண்மைகள் வெளிக்கொணரப்படவில்லை – விக்னேஸ்வரன் உரை

போரிலே உயிரிழந்த பொதுமக்கள் தொடர்பான உண்மைநிலை இதுவரை வெளிக்கொணரப்படவில்லை. அதற்குக் காரணமானவர்களைக் கண்டறிவதற்கான உண்மையான- நம்பகமான-  ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய விசாரணைப் பொறிமுறை ஏற்படுத்தப்படாமை,தமிழ்மக்கள் மத்தியில் விரக்தியை உருவாக்கியுள்ளது.

தமிழர் தாயகமெங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கொன்று குவிக்கப்பட்டதை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயகத்தில் பரவலாக இடம்பெற்றுள்ளன.

முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக நடந்த நினைவேந்தல் நிகழ்வு

இறுதிக்கட்டப் போரில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் உயிர்ப்பலியெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்காலில் இன்று காலை நினைவுச்சுடர் ஏற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிறிலங்கா படையினரின் பிடியில் க.வே.பாலகுமாரன்- மற்றொரு போர்க்குற்ற ஒளிப்படம்

இறுதிக்கட்டப் போரில், சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே.பாலகுமாரன், மற்றும் அவரது மகன் உள்ளிட்ட மூவர் சிறிலங்காப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள புதிய போர்க்குற்ற ஒளிப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இன்று தமிழரின் தேசிய துக்க நாள்; விளக்கேற்றி உறவுகளுக்கு அஞ்சலிப்போம் – இரா.சம்பந்தன்

இன்றைய நாள் தமிழரின் தேசிய துக்க நாள். போரால் எமது இனம் ஈவிரக்கமின்றி சிதைக்கப்பட்ட நாள். இந்த நாளில், இழந்த எமது உறவுகளுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

சம்பூர் மக்களின் காணி உரிமைக்காக மீண்டும் உயர்நீதிமன்றம் செல்கிறது கூட்டமைப்பு

சம்பூரில் பொதுமக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்கும் சிறிலங்கா அதிபரின் வர்த்தமானி உத்தரவை இடைநிறுத்தி, சிறிலங்கா உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பான  இடையீட்டு மனுவொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்யவுள்ளது.

மகிந்த அணியினரின் வெற்றிவிழா – கொழும்பில் இன்று ஏற்பாடு

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவு கூரும் வகையில், இலங்கைத் தீவில் உள்ள தமிழர்கள் இன்று துக்கம் அனுஷ்டிக்கும் நிலையில், கொழும்பில் மகிந்த ராஜபக்ச அணியினரால் இன்று போர் வெற்றி விழா கொண்டாட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

தேசிய வறுமைக்கோட்டு எல்லைக்குள் யாழ், முல்லை, அம்பாறை மாவட்டங்கள்

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்கள் வறுமைக்கோட்டு எல்லைக்குட்பட்ட சராசரி தலா வருமானத்தைக் கொண்டுள்ளதாக, ஆகப் பிந்திய புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

புங்குடுதீவு மாணவி கொலையுடன் தொடர்புடைய மேலும் 5 பேர் கைது – தீவகத்தில் பெரும் பதற்றம்

புங்குடுதீவில் பாடசாலை மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்றுமாலை மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களைத் தம்மிடம் ஒப்படைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தீவகத்தில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டது.

மீண்டும் முளை கொள்வோம்

நம் நெஞ்சமெலாம் பதைபதைக்க, உலகம் முழுதும் வேடிக்கை பார்த்திருக்க, ஆயிரக்கணக்கான எமது உறவுகள் கொன்றழிக்கப்பட்ட கோரம் நிகழ்ந்து ஆறு ஆண்டுகள் முடிந்து விட்டன.