மேலும்

நாள்: 15th May 2015

மே இறுதிப் பகுதிக்கு தள்ளிப் போகிறது நாடாளுமன்றக் கலைப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம், இந்த மாத இறுதியிலேயே கலைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, எதிர்வரும் 20ம் நாள் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என எதிர்வு கூறப்பட்டது.

கோத்தா வழக்கின் தீர்ப்பினால் குழப்பத்தில் அரசாங்கம் – கொமன்வெல்த் உதவியை நாடுகிறார் ரணில்

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு மீதான நீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பாக, கொமன்வெல்த் அமைப்பின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

போரில் இறந்த உறவுகளை நினைவுகூர தமிழருக்குத் தடையில்லை – சிறிலங்கா காவல்துறை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டில் எந்த பகுதியிலும், தமிழர்கள் போரில் இறந்த தமது உறவுகளை நினைவு கூரலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. அது அவர்களின் உரிமை என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர்  ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மே-19 பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்ட நாள் – வெற்றி விழா அல்ல என சிறிலங்கா அறிவிப்பு

சிறிலங்காவில் போர் வெற்றி நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த மே மாதம் 19ஆம் நாளை, பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்ட நாளாகக் கடைப்பிடிக்கப் போவதாக, சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.