மேலும்

நாள்: 12th May 2015

சதுப்புநிலக் காடுகளைப் பாதுகாக்கும் உலகின் முதல் நாடாகிறது சிறிலங்கா

சதுப்புநிலக் காடுகளை முழுமையாகப் பாதுகாக்கும் உலகின் முதல் நாடாக சிறிலங்கா மாறவுள்ளது. இதற்கான திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் பிரதி அமைச்சர் திடீர் மரணம்

சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு,மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் நிரஞ்சன் விக்கிரமசிங்க சற்று முன்னர் திடீர் சுகவீனம் காரணமாக பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமானார்.

மீண்டும் நேபாளத்தைத் தாக்கியது பாரிய நிலநடுக்கம் – சிறிலங்கா தூதரகமும் சேதம்

நேபாளத்தை இன்று நண்பகல் மீண்டும் தாக்கிய பாரிய நிலநடுக்கத்தினால் காத்மண்டுவில் உள்ள சிறிலங்கா தூதரகமும் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் சிறிலங்காவுடன் புதிய உடன்பாடுகளில் கையெழுத்திடுகிறது ரஷ்யா

பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில், சிறிலங்காவும் ரஷ்யாவும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ளும், புதிய உடன்பாடுகள் மற்றும் புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திடவுள்ளன.

ஜெயலலிதா விடுதலையை வரவேற்கும் இலங்கைத் தமிழ் அரசியல் பிரமுகர்கள்

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளது குறித்து, இலங்கைத் தமிழர் அரசியல் பிரமுகர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதுடன், விரைவில் அவர் முதல்வர் பதவியை பொறுப்பேற்பார் என்றும் எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து 65 அகதிகள் நாளை நாடு திரும்புகின்றனர்

போரின் போது நாட்டை விட்டுத் தப்பிச் சென்று தமிழ்நாட்டில் அடைக்கலம் தேடியிருந்த 65 இலங்கைத் தமிழர்கள் நாளை சிறிலங்காவுக்குத் திருப்பி அழைத்து வரப்படவுள்ளதாக, சிறிலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

தேர்தல்முறை மாற்றம் குறித்து கட்சித் தலைவர்களுடன் மைத்திரி ஆலோசனை

20வது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக, தேர்தல் முறைமையை மாற்றியமைப்பது தொடர்பான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமது யோசனைகளை நாளை மதியம் 12 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.