மேலும்

நாள்: 27th May 2015

சிறிலங்காவில் நடப்பதை ஜோன் கெரியும், கமரூனுமே தீர்மானிக்கின்றனர் – கெஹலிய ரம்புக்வெல

சிறிலங்காவில் என்ன நடக்க வேண்டும் என்பதை, அதிபர் மைத்திரிபால சிறிசேனவோ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ தீர்மானிப்பதில்லை, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனும் அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரியுமே தீர்மானிக்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் உரிமையைப் பெற்றுக் கொடுப்பது பாஜகவின் கடமை- முரளிதரராவ்

இந்தியாவிலும் சிறிலங்காவிலும் உள்ள தமிழர்களின் நலன்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாக, பாஜகவின் தேசிய செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தைக் கவிழ்க்க தருணம் பார்த்துக் காத்திருக்கும் மகிந்த விசுவாசிகள்

இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில், இது தனது அயல்நாடுகள் தொடர்பில் அதிகளவில் அக்கறை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் சிறிலங்காவில் நடைபெறும் தற்போதைய அரசியல் மாற்றங்கள் இதற்கு மாறுபட்டதாகக் காணப்படுகிறது.  

புலிகளை நினைவு கூர்ந்தாராம் விக்னேஸ்வரன் – ஞானசார தேரர் கூறுகிறார்

நீதிமன்றம் விதித்த தடைஉத்தரவை மீறி, விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது ஏன் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர்.

மைத்திரியை புங்குடுதீவு செல்ல விடாமல் தடுத்த அதிபர் பாதுகாப்புப் பிரிவு

யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, புங்குடுதீவுக்குச் செல்வதற்கு, சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவினர் அனுமதிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.