மேலும்

நாள்: 29th May 2015

சிறிலங்கா மீதான அனைத்துலக அழுத்தங்கள் தொடர வேண்டும் – அமெரிக்க ஆய்வு மையம் கூறுகிறது

சிறிலங்கா மீதான மனித உரிமை அழுத்தங்கள் தொடரப்பட வேண்டும் என்று கலிபோர்னியாவை தளமாக கொண்ட, அமெரிக்க ஆய்வு மையமான ஓக்லன்ட் நிறுவகம் வெளியிட்டுள்ள விரிவான ஆய்வு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

துறைமுக நகரத் திட்டத்தை ஆராய புதிய குழு நியமனம்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தொடர அனுமதிப்பதா என்பது குறித்து ஆராய புதிய குழுவொன்றை சிறிலங்கா அமைச்சரவை நியமித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த, இதுதொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

எதிர்க்கட்சியை சேர்ந்த ஐவரை புதிய அமைச்சர்களாக நியமித்தார் மைத்திரி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக இன்று அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

சிறிலங்காவின் எதிர்கால வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கப் போகும் தேர்தல்

சிறிலங்காவானது ஐ.நா மனித உரிமைகள் சபையை எதிர்ப்பதா அல்லது ஒத்துழைப்பை வழங்குவதா என்பதையும் இது கீழைத்தேய நாடுகளுடன் நட்புறவைத் தொடர்வதா அல்லது மேற்குலக நாடுகளுடன் அணிசேர்வதா என்பதையும் சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலே தீர்மானிக்கும். 

வித்தியா வன்புணர்வு ஒரு அனைத்துலக வியாபார முயற்சி – விடமாட்டோம் என்கிறது அரசாங்கம்

புங்குடுதீவில் மாணவி வித்தியாவை வன்புணர்வுக்குட்படுத்தி, அந்தக் காட்சிகளை வெளிநாட்டுக்கு விற்கும் முயற்சியே நடந்துள்ளது என்றும், இதுகுறித்து சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன.

மகிந்தவின் கனவுக்கு ஆப்பு வைத்தார் மைத்திரி

வெற்றிலைச் சின்னத்தில், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் தமிழ் மக்கள் மீது தொடரப்பட்டுள்ள மௌனப் போர் – அமெரிக்க ஆய்வு அறிக்கை

சிறிலங்காவில் போர் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையிலும், அங்கு மௌனமான போர் ஒன்று தொடர்ந்து கொண்டிருப்பதாக, கலிபோர்னியாவை தளமாக கொண்ட அமெரிக்க ஆய்வு மையமான ஓக்லண்ட் நிறுவகம் (Oakland Institute) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.