மேலும்

சிறிலங்காவுக்கு எந்த வழியிலான உதவியை வழங்கவும் தயார் – ஜோன் கெரி வாக்குறுதி

kerry-pressஇலங்கையர்கள் தமது எதிர்காலத்தை வடிவமைக்க எந்த வழியிலான உதவிகளையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வாக்குறுதி அளித்துள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இன்று காலை நடத்திய சந்திப்பை அடுத்து, கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“சிறிலங்காவின் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா விரும்புகிறது.

ஊழலை ஒழிக்கவும், ஜனநாயக நிறுவனங்களை கட்டியெழுப்பவும்,  நல்லிணக்க செயல்முறைகளின் மூலம், கடந்த காலத் தவறுகளை சரி செய்யவும், சிறிலங்காவின் புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை அமெரிக்கா பாராட்டுகிறது.

kerry-mangala-talks

நான் இங்கு வந்திருப்பதற்குக் காரணம், ஜனநாயகத்தை மீளமைப்பதற்கான உங்களின் பயணத்தில், அமெரிக்க மக்கள் உங்களுடன் நிற்கிறார்கள் என்பதை சிறிலங்கா மக்களுக்கு கூறுவதற்காகத் தான்.

இலங்கையர்கள் தமது எதிர்காலத்தை வடிவமைக்க எந்த வழியிலான உதவிகளையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது.

உங்களுடனான எங்களின் பங்குடமையை, பரவலாக்கவும், ஆழப்படுத்தவும் நாம் விரும்புகிறோம்.  இரண்டு நாடுகளும், ஆண்டுதோறும் பங்குடமை கலந்துரையாடலை ஆரம்பிக்கவுள்ளன.

அமெரிக்காவின் திறைசேரி மற்றும் வர்த்தகத் திணைக்களங்களின், அதிகாரிகள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவார்கள்.” என்றும் ஜோன் கெரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *