மேலும்

நாள்: 6th May 2015

மைத்திரியிடம் 5 கோரிக்கைகளை முன்வைத்த மகிந்த

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று நடத்திய பேச்சுக்களின் போது, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தரப்பினால், ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்தவின் பாதுகாப்புக்குப் பொறுப்பான கேணல் மகேந்திர பெர்னான்டோவிடம் விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியான, கேணல் மகேந்திர பெர்னான்டோ, சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவினால் இன்று விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

முடிவுக்கு வந்தது மகிந்த – மைத்திரி பேச்சு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான பேச்சுக்கள் முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில வாரங்களுக்கு பொறுத்திருங்கள் – சிறிலங்கா அமைச்சர்களுக்கு ஜோன் கெரி ஆலோசனை

ஈரானுடனான அமெரிக்காவின் உறவுகள் விரைவில் சுமுகமடையும் என்றும் இன்னும் சில வாரங்களுக்கு சிறிலங்காவைப் பொறுத்திருக்குமாறும், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

தாமதமாக வந்து சேர்ந்தார் மகிந்த – மைத்திரியுடன் சந்திப்பு ஆரம்பம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சிறிலங்கா அதிபரின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்று வருகிறது.

கொழும்பில் அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் – புதிய அரசுடன் உறவை வலுப்படுத்த முயற்சி

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன், ஆட்கடத்தல்களைத் தடுத்தல் தொடர்பான பேச்சுக்களை நடத்துவதற்காக, அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் பீற்றர் டட்டன் கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜோன்ஸ்டன் பெர்னான்டோவுக்கு 11ம் நாள் வரை விளக்கமறியல் நீடிப்பு

சதொச வில் மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவுக்கு, வரும் மே 11ம் நாள் வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் சீன நீர்மூழ்கிகள் – பதிலளிக்க மறுத்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர்

கொழும்புத் துறைமுகத்தில் சீன நீர்மூழ்கிகள் தரித்துச் சென்ற விவகாரம் தொடர்பாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதிப் பேச்சாளர், ஜெப் ரத்கே, கருத்து எதையும் வெளியிட மறுத்துள்ளார்.

நாளை பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தல் – ஈழத்தமிழர்களின் ஆதிக்கம் வெளிப்படுத்தப்படுமா?

பிரித்தானியாவில் நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் உள்ளிட்ட நான்கு இலங்கை வம்சாவளியினரும் போட்டியிடுவதால், பரபரப்பு அதிகமாகியுள்ளது.

அமெரிக்கா அழுத்தம் எதையும் கொடுக்கவில்லை – என்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பாக, அமெரிக்காவிடம் இருந்து தமது அரசாங்கம் எந்தவொரு அழுத்தங்களையும் எதிர்கொள்ளவில்லை என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.