மேலும்

நாள்: 4th May 2015

வெசாக் கொண்டாட்டங்களில் நிஷா பிஸ்வால் – இன்று கொழும்பில் இருந்து புறப்பட்டார்

அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், சிறிலங்காவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு இன்று கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சிறிலங்கா மீதான ஒபாமா நிர்வாகத்தின் கொள்கை மாற்றம் காணுமா?

சிறிலங்கா தொடர்பில் அடுத்த சில மாதங்களுக்கு ஒபாமா நிர்வாகம் மிகவும் சாதகமான உறுதியான தொடர்பைப் பேண முயற்சிக்கும். ஏனெனில் சிறிலங்காவில் புதிதாகத் தெரிவாகிய அரசாங்கம் மீதான இராஜதந்திர அழுத்தத்தைக் குறைப்பதற்கான நகர்வுகளை அமெரிக்கா தொடர்ந்தும் மேற்கொள்ளும்.

ஆபத்தான கட்டத்தைத் தாண்டினார் மன்னார் ஆயர் – உள்ளக இரத்தக்கசிவுக்கு சிகிச்சை

கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆபத்தான கட்டத்தைத் தாண்டியுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

போர்க்குற்ற விசாரணை குறித்த ஜோன் கெரியின் நிலைப்பாடு – சொல்ஹெய்ம் வரவேற்பு

ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, கேட்டுக் கொண்டதற்கு, சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா அறிக்கையில் கோத்தா உள்ளிட்ட 40 பேர் மீது போர்க்குற்றச்சாட்டு?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சமர்ப்பிக்கப்படவுள்ள சிறிலங்கா குறித்த அறிக்கையில், 40 பேருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

புதனன்று மகிந்த – மைத்திரி சந்திப்புக்கு ஏற்பாடு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.

புலம்பெயர் தமிழ்க்கல்வி சரியான திசையில் பயணிக்கிறதா? – நோர்வேயில் நடந்த ஆய்வரங்கு

புலம்பெயர் சூழலில் தமிழ்க் கல்வி தொடர்பாக தமிழ்3 வானொலியின் ஏற்பாட்டில் கடந்த மே 1ம் நாள் வெள்ளிக்கிழமை, ஒஸ்லோவின் Linderud பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற ஆய்வரங்கில் பயனுள்ள, காத்திரமான பல விடயங்கள் பேசப்பட்டுள்ளன.