மேலும்

நாள்: 16th May 2015

நேற்று நடைமுறைக்கு வந்தது 19வது திருத்தச்சட்டம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் 28ம் நாள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட, 19வது திருத்தச்சட்டம் நேற்றுமுதல் நடைமுறைக்கு வந்திருப்பதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தாவெல தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கின் தேர்தல் தொகுதிகள் பறிபோகாது – பிரதான கட்சிகள் இணக்கம்

சிறிலங்காவின் தேர்தல் முறையை மாற்றியமைக்கும், உத்தேச 20வது திருத்தச்சட்டத்தில், வடக்கு, கிழக்கில் தற்போதுள்ள தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையை குறிப்பிட்ட காலத்துக்குள் மாற்றியமைப்பதில்லை என்று இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பூர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

சம்பூரில் சிறிலங்கா அரசாங்கத்தினால் கைத்தொழில் வலயத்துக்காக தனியார் காணிகளை, சுவீகரிக்க வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யும் சிறிலங்கா அதிபரின் வர்த்தமானி அறிவிப்புக்கு, சிறிலங்கா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.

மே 18இல் வடக்கு மாகாணசபை ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு

இறுதிக்கட்டப் போரில் மரணமான உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்காலில் நாளை மறுநாள்- மே 18ம் நாள், நடைபெறவுள்ளது.