மேலும்

நாள்: 14th May 2015

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக நியமனம்

சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக (Chief of Staff) மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

சிறிலங்கா இராணுவத்துக்கு குதிரைகளை வழங்குவதில் இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி

சிறிலங்கா இராணுவத்துக்கு குதிரைகளை அன்பளிப்புச் செய்வதில் இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி போட்டுக் கொண்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

புலம்பெயர் தமிழர்களை அமைதியாக்கி விட்டோம் என்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன

கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர், புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து சிறிலங்கா அழுத்தங்களை எதிர்கொள்ளவில்லை என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தியா – சிறிலங்கா இடையே பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க வலியுறுத்துகிறது ஐ.நா

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு திரும்புவதற்கு வசதியாக, இருநாடுகளுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீள ஆரம்பிக்குமாறு ஐ.நா முகவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

உணர்வுபூர்வமான நினைவேந்தலுக்கு அழைப்பு விடுக்கிறது தமிழ் சிவில் சமூக அமையம்

இறுதிக்கட்டப் போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களை உணர்வுபூர்வமாக நினைவுகூர முன்வர வேண்டும் என்று தமிழ் சிவில் சமூக அமையம் அழைப்பு விடுத்துள்ளது.

20வது திருத்தச்சட்டமூலம் குறித்து அமைச்சரவையில் இணக்கப்பாடு இல்லை

தேர்தல் முறை மாற்றம் தொடர்பான 20வது திருத்தச்சட்டம் தொடர்பாக நேற்றிரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இணக்கப்பாடு ஏற்படாததால், இதுதொடர்பான முடிவு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைகளைக் கலைக்கும் முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை – கரு ஜெயசூரிய

உள்ளூராட்சி சபைகளைக் கலைப்பது தொடர்பான எந்த முடிவையும் அரசாங்கம் இன்னமும் எடுக்கவில்லை என்று சிறிலங்காவின் பொது நிர்வாக உள்ளூராட்சி மற்றும் ஜனநாயக நல்லாட்சி அமைச்சர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை நினைவு கூர அனுமதிக்க முடியாது – சிறிலங்கா அரசாங்கம்

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், விடுதலைப் புலிகளை நினைவு கூரும் எந்தவொரு முயற்சிக்கும் அனுமதி அளிக்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐந்து மாதங்களுக்கு கோத்தாவைக் கைது செய்ய முடியாது – உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை, வரும் ஒக்ரோபர் மாதம் வரை கைது செய்ய முடியாத நிலை புதிய அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலங்கள் முன்வைக்கப்படாது – பிரதமர் ரணில்

தற்போதைய நாடாளுமன்றத்தில் இனிமேல் எந்த புதிய சட்டமூலமும் முன்வைக்கப்படாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.