மேலும்

நாள்: 3rd May 2015

பொறுப்புக்கூறல் நிலைப்பாட்டில் இருந்து விலகாது அமெரிக்கா – கூட்டமைப்பிடம் ஜோன் கெரி உறுதி

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள புதிய சூழலைத் தமிழர் தரப்பு, சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மன்னார் ஆயரின் உடல் நிலையில் முன்னேற்றம் – மருத்துவர்கள் தகவல்

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடம் 200 மில். டொலருக்கு தொடருந்து இயந்திரங்கள்,பெட்டிகளை வாங்குகிறது சிறிலங்கா

இந்தியாவிடம் இருந்து 200 மில்லியன் டொலர் பெறுமதியான டீசலினால் இயக்கப்படும் தொடருந்து இயந்திரங்கள் மற்றும், தொடருந்துப் பெட்டிகளை வாங்கவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் பதுக்கப்பட்டுள்ள சொத்துக்கள் சிறிலங்காவிடம் ஒப்படைக்கப்படும் – ஜோன் கெரி

சிறிலங்காவில் இருந்து திருடப்பட்ட சொத்துக்கள் அமெரிக்காவில் இருந்தால்,  அவை சிறிலங்காவிடம் ஒப்படைக்கப்படும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி உறுதியளித்துள்ளார்.

ஜோன் கெரியிடம் மைத்திரி முன்வைத்த மூன்று கோரிக்கைகள்

ஊழல், மோசடி மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அதிகாரிகளுக்கு பயிற்சி வசதிகளை அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

ஜோன் கெரியிடம் அமெரிக்காவின் உதவியைக் கோரவுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, இன்று காலை இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆறு பேர் கொண்ட குழுவினரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.