மேலும்

மேஜர் ஜெனரல் உதய பெரேராவின் இடமாற்றம் வழக்கமானதாம்

Brigadier Ruwan Wanigasooriyaயாழ்ப்பாணத்தில் இருந்து மேஜர் ஜெனரல் உதய பெரேரா, இடமாற்றம் செய்யப்பட்டது வழக்கமானதொரு நடவடிக்கை தான் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

“ஒரு பிரதேசத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் பணியாற்றிய அதிகாரிகளுக்கு வழங்கப்படும் இடமாற்றமே, மேஜர் ஜெனரல் உதய பெரேராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர் தற்போது, கொள்கை மற்றும் பயிற்சிப் பிரிவின் பணிப்பாளர் நாயகமான நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது ஆற்றல் மற்றும் அனுபவங்களை புதிய பதவியின் ஊடாக, படையினருக்கு வழங்குவார்” என்றும் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

யாழ்.படைகளின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் கடந்த 28ம் நாள் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *