சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக பதவியேற்றார் எரிக் மேயர்,
சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர், அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுள்ளார் என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர், அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுள்ளார் என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மட்டும் 15 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கனடாவில் காலமான மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் (சபேசன்) உடலுக்கு நேற்றிரவு யாழ். ஊடக அமையத்திலும், யாழ் தினக்குரல் நாளிதழ் பணியகத்திலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அருகே எழுமாற்றாக தோண்டப்பட்ட இரண்டு இடங்களிலும் மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இரத்தினபுரி- குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு கைதிகள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 12 பேர் காயமடைந்ததாகவும் குருவிட்ட காவல்துறையினர் தெரிவித்தனர்.
புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட வன்முறைகளின் போது, கைதி ஒருவர் உயிரிழந்தார் என்றும் 11 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், சிறிலங்காவின் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 499 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவிற்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, மலையகத் தமிழ்க் கட்சிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்துமாறு, சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும் என, தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடம், இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி உறுதியளித்துள்ளார்.