சிறிலங்கா பாதுகாப்புச் செயலரிடம் விடை பெற்றார் ஜூலி சங்
சிறிலங்காவில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து கொண்டு வெளியேறவுள்ள, அமெரிக்க தூதுவர் ஜூலி சங் , சிறிலங்கா பாதுகாப்பு செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை இன்று பாதுகாப்பு அமைச்சில் விடைபெறுவதற்காக சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளரும் அமெரிக்கத் தூதுவரும் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்புக் குறித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
மேலும் பிராந்திய பாதுகாப்பு, திறன் மேம்பாடு மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்களில் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்தச் சந்திப்பு அமெரிக்காவுடன் நெருக்கமான மற்றும் ஆக்கபூர்வமான உறவுகளைப் பேணுவதற்கான சிறிலங்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் மத்யூ ஹவுசும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார்.
அமெரிக்க தூதுவர் ஜூலி சங், எதிர்வரும் 16ஆம் திகதி சிறிலங்காவில் இருந்து வெளியேறவுள்ளார்.

