மேலும்

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஏட்டிக்குப் போட்டியாக போராட்டம்

மத்துகமவில் ஆளும்கட்சி  மற்றும் எதிர்க்கட்சியினரால் ஏட்டிக்குப் போட்டியாக  இரண்டு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

மத்துகம நகரில் நேற்று  அரசாங்கத்துக்கு ஆதரவான பெண்கள் அமைப்புகளின்  ஏற்பாட்டில், எதிர்க்கட்சிகளால் பெண்கள் குறிவைக்கப்படுவதைக் கண்டித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் பெருமளவில் பெண்கள் கலந்து கொண்டதுடன், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பல பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

அதேவேளை, இலவசக் கல்வி மற்றும் புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிரான சவால்கள் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் தீங்குகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,  ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியால் மற்றொரு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மத்துகமவில் உள்ள, இலவசக் கல்வியின் தந்தையான சி.டபிள்யூ டபிள்யூ கன்னங்கரவின் உருவச் சிலைக்கு முன்பாக எதிர்க்கட்சிகளின் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜகத் விதான, அஜித் பி. பெரேரா, சர்வஜன பலய தலைவர் திலித் ஜெயவீர, முன்னாள் அமைச்சர்கள் ரொசான் ரணசிங்க மற்றும் சன்ன ஜெயசுமண உள்ளிட்ட பலரும் இந்தப் போராட்டததில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *