மேலும்

Archives

ஐ.நா மனித உரிமை ஆணையாளருடன் சுமந்திரன் சந்திப்பு

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் ஆலோசகராக ஹரீம் பீரிஸ் நியமனம்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கான ஆலோசகராக ஹரீம் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் இருந்து ஹரீம் பீரிஸ் இன்று நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.

சிறிலங்காவின் பாதுகாப்பு பிராந்தியத்துக்கு முக்கியமானது – துருக்கி வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவின்  பாதுகாப்பும் உறுதித்தன்மையும் இந்தப் பிராந்தியத்துக்கும் அதற்கு அப்பாலும், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என, துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லட் கவுசோக்லு தெரிவித்தார்.

டீசலைக் கொடுத்து அகதிகள் படகை வெளியேற்ற இந்தோனேசியா முடிவு

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் கரையொதுங்கிய இலங்கைத் தமிழ் அகதிகளின் படகுக்குத் தேவையான 7 மெட்ரிக் தொன் டீசலை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக  இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கின் மீது திரும்பும் சீனாவின் கவனம் – அபிவிருத்திக்கு உதவப் போவதாக அறிவிப்பு

முப்பதாண்டு காலப் போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு, சீனா உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக, சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக்குடியுரிமை – மோடியிடம் வலியுறுத்தினார் ஜெயலலிதா

தமிழ்நாட்டில் அகதிகளாக இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு, இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

மீண்டும் இந்தோனேசியாவுக்கே திரும்பியது இலங்கைத் தமிழ் அகதிகள் படகு

44 இலங்கைத் தமிழ் அகதிகளுடன், இந்தோனேசியக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த படகு, அவுஸ்ரேலியா நோக்கிப் புறப்பட்டுச் சென்ற போதும், மீண்டும் அச்சே பகுதிக்குத் திரும்பி வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இருந்து புறப்பட்ட 44 இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தோனேசிய கடலில் தத்தளிப்பு

இலங்கைத் தமிழ் அகதிகள் 44 பேருடன், அவுஸ்ரேலியாவில் புகலிடம் தேடும் நோக்கில், இந்தியாவில் இருந்து புறப்பட்ட படகு ஒன்று இந்தோனேசியக் கடற்பரப்பில் இயந்திரக் கோளாறினால் தத்தளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா கடற்படையினருக்கான ஈரூடக பயிற்சி – வாகரையில் தரையிறக்க ஒத்திகை

சிறிலங்கா கடற்படையின் தரையில் போரிடும் படைப்பிரிவுக்கான ஈரூடக நடவடிக்கை பயிற்சிநெறியின், இரண்டாவது தரையிறக்க பயிற்சி, மட்டக்களப்பு வாகரையில் நிறைவடைந்துள்ளது.

சிறிலங்கா கடற்படைக்காக இந்தியா கட்டிய ரோந்துக் கப்பல் கோவாவில் வெள்ளோட்டம்

சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டுள்ள முதலாவது, ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.