மேலும்

மற்றொரு அமெரிக்க கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

USS Comstock (1)அமெரிக்க கடற்படையின் தரையிறக்க கப்பலான யுஎஸ்எஸ் கொம்ஸ்ரொக் நான்கு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

பசுபிக் கட்டளைப் பீடத்தின் கீழ் இயங்கும், 11 ஆவது மரைன் விரைவுப் படைப்பிரிவைச் சேர்ந்த, தரையிறக்க கப்பலான யுஎஸ்எஸ் கொம்ஸ்ரொக், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த போது சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

மனிதாபிமான உதவிகள், அனர்த்த மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபடும் நோக்கிலேயே அமெரிக்க கடற்படைக் கப்பல் கொழும்பு வந்துள்ளது.

USS Comstock (1)USS Comstock (2)

அத்துடன் சிறிலங்கா கடற்படையினருடன் பல்வேறு விளையாட்டுகள் உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் அமெரிக்க கடற்படையினர் ஈடுபடவுள்ளனர்.

அமெரிக்க கடற்படையின் யுஎஸ்என்எஸ் போல் ரிவர் என்ற கப்பல், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இரண்டு வாரங்களாகத் தரித்து நின்று பயிற்சிகளை மேற்கொண்டு விட்டு, கடந்த மார்ச் 187ஆம் நாளே புறப்பட்டுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *